நவம்பர் மாதம் மீண்டும் A/L
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று கல்வி அமைச்சில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், 2025ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைகளை செப்டம்பர் மாதம் நடாத்த முடியும் என கல்வி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை முடிவடைந்தவுடனேயே, உயர் தர பரீட்சைகளை நடாத்தி, மாணவர்களின் காலம் வீண்விரயமாவதை தடுப்பதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.