OOSAI RADIO

Post

Share this post

ஓய்வு பெறும் வீரருக்கு பரிசளித்த கோலி, சர்மா!

முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியின் தலைவர் காயம் காரணமாக ஆடுகளத்தை விட்டு வெளியேறிய பிறகு, அணியை சிறப்பாக வழிநடத்தி இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக அமைந்தார் டீன் எல்கர். முதல் டெஸ்டில் சிறப்பாக விளையாடி 185 ஓட்டங்கள் எடுத்த டீன் எல்கருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியை டீன் எல்கர் வழிநடத்தினார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே டீன் எல்கர் அறிவித்திருந்தார்.

2 வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஓய்வு பெறும் டீன் எல்கருக்கு விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசளித்தார். ரோஹித் சர்மா இந்திய அணியினரின் கையெழுத்துகள் அடங்கிய டி ஷர்டினை பரிசளித்து கௌரவித்தார்.

86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள எல்கர் 5,347 ஓட்டங்களுடன் ஓய்வு பெறுகிறார். இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதும் அவருக்கே கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இதனைப் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.

Leave a comment

Type and hit enter