OOSAI RADIO

Post

Share this post

2024 இல் உயிரிழந்தவர்களுடன் நாம் கதைக்க முடியும்!

இந்த உலகில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே கணித்து கூறும் பல்வேறு தீர்க்கதரசிகளைப்பற்ற நாம் அறிந்திருக்கிறோம்.

அதில் பாபா வாங்கா, நாஸ்ட்ராடாமஸ் போன்றோர் மிகவும் பிரபலமானவர்கள்.

இவர்களின் பல கணிப்புகள் உண்மையாகவே நடந்துள்ளன இதனால் ஒவ்வொரு ஆண்டிலும் நாம் நுழையும் போதும், இந்த ஆண்டிற்காக பாபா வாங்கா, நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் என்னவென்பதை அறிந்து நாம் மிகுந்த அச்சத்தோடு அப்படி நடந்துவிடுமோ என்று கடப்பதே வழமையாக இருக்கிறது.

இப்படியிருக்க இந்த பட்டியலில் புதிதாக பிரேசிலைச் சேர்ந்த அதோஸ் சலோமியும் இடம் பிடித்துள்ளார்.

ஏற்கனவே நாம் பார்த்தவர்கள் எல்லாம் தங்கள் குறிப்புகளை வைத்துவிட்டு மரணித்துப்போனவர்கள் ஆனால் அதோஸ் சலோமி இன்னும் இறக்கவில்லை நம்மிடையே வாழ்ந்துகொண்டு அடுத்து என்ன நிகழப்போகிறது என்று சொல்லுகிறார் அதோஸ் சலோமியின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் எப்படியிருக்கிறது என பார்ப்போம்.

மூன்றாம் உலகப்போர் 2024 ஆம் ஆண்டில் தென் சீனக் கடலில் எதிர்பாராத அளவில் பெரிய பதற்றம் ஏற்படலாம் அல்லது ஒரு பெரிய சைபர் தாக்குதல் கூட தூண்டப்படலாம் என்று அதோஸ் சலோமி கணித்துள்ளார்.

இந்த பதற்றத்தால் உலகளாவிய நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த ஆண்டில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா இடையே மோதல்கள் ஏற்பட்டு, மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த மோதல் உலகளாவிய மோதலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார். அதேபோல, ரஷ்யா, உக்ரைன் இடையே பதற்றம் அதிகரிக்கும் ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்தும் சலோமி கணித்துள்ளார்.
வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு

அதுவும் இந்த 2024 ஆம் ஆண்டில் மோதல்கள் இன்னும் தீவிரமாகும். இந்த மோதலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அமெரிக்காவும் தலையிட்டால், நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல ஏலியன்களுடனான தொடர்பு பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கிறார் அதில் 2024 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்வு கொள்வதன் மூலம், முற்றிலும் மாற்றமடையும் ஒரு ஆண்டாக இருக்கும் என்று சலோமி கூறியுள்ளார்.

அதுவும் இது ஒரு பயங்கரமான படையெடுப்பாக இருப்பதற்குப் பதிலாக, மனிதர்களும் வேற்றுகிரகவாசிகளும் சமிக்ஞைகள் மூலம் தொடர்பு கொள்வார்கள் என்று கணித்துள்ளார் அதேவேளை, காலநிலை மாற்றம் பாரிய பேரழிவை ஏற்படுத்தும் என்றும் 2024 ஆம் ஆண்டில் நிலவும் காலநிலை குறித்தும் கூறியுள்ளார்.

அதில் அமெரிக்கா வெள்ளம், எரிமலை வெடிப்பு போன்றவற்றுடன் போராடும் என்றும், சூறாவளி மற்றும் வெப்பமண்டல புயல்கள் மெக்சிகோ வளைகுடா அருகே கொடிய வெள்ளத்தை கொண்டு வரும் என்று கணித்துள்ளார். இது தவிர கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் வாஷிங்டன் மேலும் காட்டுத் தீயால் பாதிக்கப்படலாம் என்னும் கணித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் AI உதவியுடன் மக்கள் இறந்த தங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசமுடியும் என்று சலோமி கணித்துள்ளார். இந்த தொழில்நுட்பம் ஒரு விஞ்ஞான முன்னேற்றம் மட்டுமல்ல. மர்மங்களை அவிழ்த்து, ஆறுதல் மற்றும் நமது வாழ்க்கைப் பணிகளைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்குகிறது.

ஏற்கனவே AI உலகில் உள்ள ரகசியங்களை கண்டுபிடிப்ப பயன்படுத்தப்பட்டு வருவதை நம்புவதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல இன்னும் நம்மை உறைய வைக்கும் இன்னுமொரு செய்தி சொல்லியிருக்கிறார் அதாவது ஒரு புதிய தொற்றுநோய் உண்டாகப்போகிறதாம் பல ஆண்டுகளாக அண்டார்டிகாவில் பனியில் புதைந்திருக்கும் கொடிய வைரஸ்களால் ஒரு புதிய கொடிய தொற்றுநோய் 2024-ல் ஏற்படப் போவதாக சலோமி கணித்துள்ளார்.

அதுவும் இது தென் துருவத்தில் இருந்து, இது விரைவாக பரவி, உலகையே துடைக்கும் என்றும் கூறுகிறார். எனவே இந்த வைரஸை கட்டுப்படுத்தாமல் விட்டால், வரலாற்றில் காணாத அளவில் பெரிய சேதம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter